7 5. இந்திய மாற்று சக்தி முயற்சிகள் புதிய வழிகள்
பல இந்திய கிராமங்களில் பெரிய பிரச்சனை உணவு சமைப்பதற்கு உபயோகப்படும் மரம். பெரிய அமைப்புகளில் ஏராளமாக மரத்தை எரித்து உணவு சமைத்தாலும், பல வித பிரச்சனைகள் இம்முறைகளால் உருவாவது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு விரகு சேகரிக்கும் உழைப்பு, எரியும் விரகுப் புகையால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கரியமில வாயு என்று பல பிரச்சனைகள் உள்ளன. சூரிய ஒளி சூட்டை உபயோகித்து சமைத்து மற்றும் குளிர்விக்கும் குஜராத் மாநில முயற்சி இங்கே..
விவசாய கழி பொருள்களை முதலில் எரிபொருளாகவும், பிறகு, உரமாகவும் பயன்படுத்த இங்கு அழகான முயற்சிகள்…
பயோகாஸ் (Biogas) இந்தியாவில் கிராமப்புறங்களில் மெதுவாக உபயோகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நகர வாசிகள் எல்.பி.ஜி. –யை நம்பி நகரங்கள் மிகவும் அவல நிலைக்கு மெல்ல நழுவிக் கொண்டு வருகின்றன. பூனே நகரில் ஆர்த்தி காஸ் அமைப்பு பயோ வாயூ மூலம் பல வீடுகளுக்கும் பரவி நம்பிக்கை அளித்து வருகிறது…
Feedback/Errata