5 3. குப்பை சக்தி ஐடியா

உலகெங்கிலும், நாம் பல வித சேதனப் பொருள்களை (Organic matter) குப்பை என்று எறிந்து விடுகிறோம். பேப்பர் 10மற்றும் பொட்டலப் பொருள்களை (packaging materials) மேற்கத்திய சமூகங்களில் அலட்சியமாக குப்பை என்று வீசி விடுகிறார்கள். பல பெரிய நகரங்களின் மிகப் பெரிய பிரச்சனை, இந்த வகை குப்பையை எப்படி சமாளிப்பது மற்றும் அப்புறப் படுத்துவது என்பதாகி விட்டது.

மறு பயன்பாடு மையங்கள் (recycle plants) மற்றும் நில நிரப்பு (landfill) வசதிகளை ஊரின் எல்லையில் ஐயனார் கோவில் போல எங்கும் காணலாம். சில வகை குப்பைகள் எரிக்கப் படுகின்றன. சில வகை குப்பைகள் அழுக விடப் படுகின்றன. அழுக விடும் போது, அதில் உருவாகும் மீத்தேன் வாயு (methane) கரியமில வாயுவை விட மோசமானது.

சில மேற்கத்திய நகரங்கள், புதிய முறையில் இந்த குப்பை கையாளுதல் பிரச்சனையை அணுகி வருகின்றன. எதற்கு, எரிப்பதற்கு (இதை Incineration என்கிறார்கள்) ஏராளமாக சக்தியை உறிஞ்ச வேண்டும்? அழுகும் குப்பையிலிருந்து வெளியாகும் வாயுவை பதப்படுத்தி, எரிபொருளாக மாற்றினால் என்ன? அப்படி உருவாக்கிய வாயுவைக் கொண்டு மற்ற குப்பைகளை எரித்து விடலாமே! மேலும் சில நகரங்கள் இன்னும் ஒரு படி மேலே யோசித்து வருகின்றன. அப்படி எரியும் குப்பை ஏற்படுத்தும் வெப்பத்தில், நீரை நீராவியாக்கி ஏன் புதிய மின்சக்தி உருவாக்க்க் கூடாது?

இப்படி, பல ஐடியாக்கள் பல மேற்கத்திய நகரங்கள் சிந்தித்து, சில முன்னோடித் திட்டங்களில் (pilot projects) ஈடுபட்டுள்ளன.

 

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.