18 11. வளரும் நாடுகளில் தாக்கம்

வளரும் நாடுகள் சக்தி பேணுதல் முயற்சிகளால் நிச்சயமாக பாதிக்கப் படும். இன்று, பெருவாரியான பொருள்கள் வளரும் நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. 2005 –க்கு முன், தரக் கட்டுப்பாடு மட்டுமே இவர்களின் பெரிய குறிக்கோளாக இருந்தது. எப்படி சக்தி உபயோகத்தை குறைப்பது என்று கவலை இல்லாமல் உற்வத்தி செய்த தயாரிப்பாளர்கள், முன்னே சொன்னது போல பல கேள்விகளும் கேட்கப்படுவார்கள். சில புதிய தயாரிப்பு முறைகளை, சக்தி பேணுதலுக்காக அரவணைக்க வேண்டி வரும். உள்ளூர் சட்டங்களைக் காட்டி இனிமேல் சாக்கு போக்கு சொல்ல முடியாது. பெரிய மேற்கத்திய வியாபாரங்கள் உள்ளூர் அரசாங்கத்தைவிட தீவிரமாக சக்தி பேணுதல் விஷயத்தில் தீவிரம் காட்டுவது உறுதி. இந்தியா போன்ற மின்சார பற்றாக்குறை நாடுகளில், ஜெனரேட்டர் வைத்துக் கொண்டு காலம் தள்ளும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்களது மேற்கத்திய வாங்கும் நிறுவனங்களுக்கு (Western buyers) பதில் சொல்ல வேண்டி வரும். ஏன், பெரிய இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

ஒரு விதத்தில் இது இந்தியா போன்ற நாடுகளில் நல்ல மாற்றங்கள் கொண்டுவர உதவலாம். கிடைத்ததுதான் மின்சாரம் என்ற காலம் விரைவில் மாற இவ்வகை முயற்சிகள் நாளடைவில் உதவ வேண்டும்.

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.